மேலும் செய்திகள்
ஆசியாவில் அதிக லாபம் தந்த அரசு கடன் பத்திரங்கள்
07-Nov-2026
‘நாஸ்டாக்’ பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆன்லைன் பயண சேவை நிறுவனமான ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான ‘மேக் மை ட்ரிப் (இந்தியா)’, ஐ.பி.ஓ., அனுமதியை செபிடமிருந்து பெற்றுள்ளது. கடந்த ஜூலை மாதம் விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த செபி, தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் நிதி, தாய் நிறுவனத்தின் பணப்புழக்கத்தை வலுப்படுத்துவதோடு நீண்டகால வளர்ச்சி திட்டங்கள், புதிய நிறுவன கையகப்படுத்துதல் மற்றும் கடன் பத்திரங்களை திரும்ப பெறுவதற்கு பயன்படுத்தப்படும். மேலும், கடுமையான போட்டி நிலவும் இந்த துறையில் பிராண்டு மதிப்பை உயர்த்த இந்த ஐ.பி.ஓ., பயனுள்ளதாக இருக்கும் என நிறுவனம் தனது தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
07-Nov-2026