மேப் மை இந்தியா 10% உயர்வு
போ க்குவரத்து வழிகாட்டுதலுக்கு, உள்நாட்டின் 'மேப்பிள்ஸ்' செயலியை பயன்படுத்துவதாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட சமூக வலைதள பதிவால், 'மேப் மை இந்தியா'வின் தாய் நிறுவனமான 'சி.இ.இன்போ சிஸ்டம்ஸ் லிமிடெட்' பங்கு விலை நேற்று வர்த்தகத்தின் போது, 10 சதவீதம் வரை உயர்ந்தது. மேப்பிள்ஸ் செயலியைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்த பின், அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அவரது பதிவில், மேப்பிள்ஸ் செயலியின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அமைச்சரின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. கூகுள் மேப் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வரும் நிலையில், உள்நாட்டு செயலியான மேப்பிள்ஸ் குறித்த தகவலால், மும்பை பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு விலை, 10 சதவீதம் வரை உயர்ந்தது. இதன்பின், வர்த்தகம் இறுதியில், 4 சதவீத உயர்வுடன் முடிந்தது.