உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

ரயில்வே துறை பங்குகள் 12 சதவீதம் உயர்வு

இந்திய ரயில்வேயில், பயணியர் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, ரயில்வே சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் நேற்று 12 சதவீதம் வரை உயர்ந்தன. நேற்று முதல் நடைமுறைக்கு வந்த புதிய கட்டண உயர்வு மற்றும் எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், இத்துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

லாபத்தை அள்ளி தந்த தங்க பத்திரம்

ம த்திய அரசின் தங்க பத்திர திட்டத்தின் 2017 - 18 சீரிஸ் - 13ல், முதலீடு செய்தவர்களுக்கு, 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 382 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. கடந்த 2017ல், 1 கிராம் 2,816 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் முதிர்வு விலை 13,563 என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2017ல் இதில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது அதன் மதிப்பு மற்றும் வட்டியையும் சேர்த்து 4.82 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

ஹிந்துஸ்தான் காப்பர் பங்கு விற்றது எல்.ஐ.சி.,

நா ட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., தன்னிடமிருந்த ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவன பங்குகளில் 2 சதவீதத்தை விற்பனை செய்துள்ளது. எனவே, இந்நிறுவனத்தில் எல்.ஐ.சி.,யின் பங்கு 6.08 சதவீதத்தில் இருந்து 4.07 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பாண்டில், ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவன பங்குகள் 76 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், எல்.ஐ.சி., லாபத்தை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ