ஏ.ஐ., தாக்கம் மற்றும் வருவாய் வளர்ச்சி குறித்த கணிப்புகள் காரணமாக, கடந்த செப்டம்பர் காலாண்டில், இந்தியாவின் 'டாப் 10' ஐ.டி., நிறுவனங்களான 'இன்போசிஸ், டி.சி.எஸ்., எச்.சி.எல்., டெக், டெக் மஹிந்திரா' உள்ளிட்ட எட்டு நிறுவனங்களின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை, அன்னிய முதலீட்டாளர்கள் விற்று உள்ளனர். ஆனால், அதற்கு மாறாக, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், டாப் 10 ஐ.டி., நிறுவனங்களில், ஒன்பது நிறுவனங்களின் பங்குகளை வாங்கி உள்ளன.
அன்னிய முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் விற்றவை வசமுள்ளவை இன்போசிஸ் 1.84% 30.08% டி.சி.எஸ்., 1.15% 10.33% கோபோர்ஜ் 2.79% 37.42%
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிறுவனங்கள் வாங்கியவை வசமுள்ளவை இன்போசிஸ் 1.87% 22.73% டி.சி.எஸ்., 0.46% 5.59% (30 செப்டம்பர் நிலவரப்படி)
Galleryகாரணம் என்ன? * 'எச்.சி.எல்., டெக், இன்போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ' உள்ளிட்ட முன்னணி ஐ.டி., நிறுவனங்களின் பங்குகள், சமீபத்திய உச்சத்தில் இருந்து 20 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளன. குறிப்பாக, டி.சி.எஸ்., உச்சபட்ச விலையில் இருந்து 33 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பிற துறைகளுடன் ஒப்பிடுகையில், கவர்ச்சிகரமான முதலீடாக இவற்றை மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. * ஏ.ஐ., தாக்கம் காரணமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐ.டி., சேவை நிறுவனங்கள் வருவாயில் 20 சதவீதம் வரை வருவாய் இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது என, நியூயார்க்கைச் சேர்ந்த நிதி ஆலோசனை நிறுவனமான 'ஜெப்ரிஸ்' கணித்துள்ளது. இதனால், துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 3.80 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதை, முதலீட்டுக்கு அச்சுறுத்தலாக அன்னிய முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.