| ADDED : ஜன 22, 2026 01:02 AM
ப ங்கு தரகு சேவை வழங்கும், 'குரோ' நிறுவனம், மியூச்சுவல் பண்டு போர்ட்போலியோவை நிர்வகிக்க பிரத்யேகமாக, 'குரோ பிரைம்' எனும் புதிய வசதியை சோதனை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்வாயிலாக, போர்ட்போலியோ தொடர்பான தரவுகளை ஆழமாக அணுகுவதுடன், வாரத்தின் 7 நாட்களும் தகவல்களை பெறுவதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட வழிகாட்டுதல்களை பயனர்கள் பெற முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் தெரிவித்ததாவது: குரோ செயலி, முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் தளமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, எங்கள் வாடிக்கையாளர்களில் பலர், மியூச்சுவல் பண்டு திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்க, திட்டங்களை ஆராய்ந்து, வழிகாட்டுவதற்கு முக்கிய முடிவுகள் எடுக்க வசதியை கேட்டு வந்தனர். குரோ பிரைம் இதற்கு தீர்வாக இருக்கும். இது, வழக்கமான மியூச்சுவல் பண்டுகளுடன் கிடைக்கும் ஓர், 'விருப்பத் தேர்வு' அம்சமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.