புதிய பென்ஷன் பண்டு ஆக்சிஸ் மேக்ஸ் லைப் அறிமுகம்
ஆக்சிஸ் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பென்ஷன் பண்டை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆக்சிஸ் மேக்ஸ் லைப் ஹை குரோத் பென்ஷன் பண்டு எனும் பெயரில் இந்த பண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: நோக்கம்: நீண்ட கால முதலீடுகள் வாயிலாக ஓய்வூதியத்திற்கு பெரிய நிதியை உருவாக்குவது யூனிட் விலை: புதிய பண்டு வெளியீடு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை. ஒரு யூனிட்டின் விலை 10 ரூபாய் ஆபத்து நிலை: பங்கு சார்ந்த முதலீடு என்பதால், ஆபத்து நிலை மிக அதிகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்றது முதலீட்டு இலக்கு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார உபகரண உற்பத்தி, நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும். கட்டணம்: ஆண்டுக்கு 1.35 சதவீதம் பண்டு நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கப்படும். அளவுகோல்: இந்த பண்டின் செயல்திறன் நிப்டி மிட்கேப் 100 இண்டெக்ஸ் உடன் ஒப்பிடப்படும். Stock illustration ID:1347193769