| ADDED : நவ 21, 2025 01:05 AM
தனியார் வங்கிகளும், மூலதன ஆதாய கணக்கு திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவங்க, மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுநாள் வரை பொதுத்துறை வங்கிகளுக்கும், ஐ.டி.பி.ஐ., வங்கிக்கும் மட்டுமே இந்த கணக்கு துவங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட 19 தனியார் வங்கிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கிராமப்புற வங்கி கிளைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலதன ஆதாய டேர்ம் டிபாசிட் கணக்குகளின் கீழ், குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம். உச்ச வரம்பு ஏதும் கிடையாது. குறைந்தபட்சம் ஏழு நாள் முதல், அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை இந்த கணக்குகளை பராமரிக்கலாம். இந்த டிபாசிட்டுக்கு எதிராக கடன் பெற முடியாது. மூலதன ஆதாய கணக்கு
சொ த்து விற்ப னை வாயிலாக ஈட்டிய மூலதன ஆதாயத்தை, அந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவுக்கு முன், குறிப்பிட்ட சொத்துகளில் மீண்டும் முதலீடு செய்ய முடியாவிட்டால், வரி செலுத்துவோர், அந்த தொகையை தற்காலிகமாக ஒரு கணக்கில் பராமரிக்கலாம். அதன் பெயர் தான் மூலதன ஆதாய கணக்கு.