உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ரிசர்வ் வங்கியின் தங்க வேட்டை

ரிசர்வ் வங்கியின் தங்க வேட்டை

இந்திய குடும்பங்களை போல், தங்கத்தை வாங்குவதில் ரிசர்வ் வங்கியின் ஆர்வமும் தொடர்கிறது. நடப்பு நிதியாண்டில், இதுவரை 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்.பி.ஐ., தங்கத்தை வாங்கி சேர்த்துள்ளது. இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 50 சதவீத வரிவிதிப்பால் நிலவும் பாதிப்புகள், தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு ஆகியவற்றுக்கு இடையே, ரிசர்வ் வங்கியின் தங்க வேட்டையும் தொடர்கிறது. கடந்த அக்.,3ம் தேதி நிலவரப்படி, நாட்டின் தங்கம் கையிருப்பு 8.70 லட்சம் கோடி ரூபாய். இதன்படி, நம்நாட்டில் 880 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக, உலக தங்க கவுன்சில் புள்ளிவிபரம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ