உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் 1.60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு

 கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் 1.60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு

க டந்த அக்டோபர் மாதத்தில், கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில், 1.60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதுவே, கடந்த 2024ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1.57 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. முந்தைய ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களிலும், கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் இருந்து 1.09 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வெளியேறி இருந்தன. அதேநேரம், லாபத்தை பதிவு செய்வது, பல்வேறு நாடுகளின் வட்டி கொள்கைகள், வர்த்தகப் பதற்றங்கள் காரணமாக, ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் குறைந்துள்ளன. காலாண்டு முடிவிற்கு பின்னர், நிறுவனங்கள் தங்களிடம் அதிகப்படியாக இருந்த பணத்தை, குறுகியகால பண்டுகளான ஓவர்ந்நைட், லிக்யுட், அல்ட்ரா-ஷார்ட் போன்றவற்றில் வைத்திருந்ததே, கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் அதிகரிக்க காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ரூ.79.88 லட்சம் கோடி மியூச்சுவல் பண்டு துறையின் மொத்த சொத்து மதிப்பு ரூ.19.51 லட்சம் கோடி கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ