உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வர்த்தக ஒப்பந்த நம்பிக்கையால் வலுப்பெற முயற்சிக்கும் ரூபாய்

 வர்த்தக ஒப்பந்த நம்பிக்கையால் வலுப்பெற முயற்சிக்கும் ரூபாய்

அ மெரிக்க டாலர் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற எதிர்மறை காரணங்கள் இருந்தபோதிலும், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் இந்திய ரூபாய் மதிப்பு வர்த்தக முடிவில் உயர்ந்தது. அமெரிக்காவில் இன்று வெளியாகும் முக்கிய வேலைவாய்ப்பு அறிக்கையில் சந்தையின் முழு கவனம் உள்ளது. அந்நாட்டின் பெடரல் வங்கி கடன் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு குறைந்ததால், டாலர் தொடர்ந்து வலிமையாக இருந்தது. உக்ரைன் நடத்திய தாக்குதலில், ரஷ்யாவின் முக்கிய 'நோவோரோசிஸ்க்' துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. நம் நாடு அதிகளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவடையும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்ததால், சந்தையில் மனநிலை நேர்மறையானது. இந்த நம்பிக்கை, டாலர் மற்றும் எண்ணெய் விலை உயர்வின் அழுத்தத்தை விட அதிகமாக இருந்ததால், ரூபாய் மதிப்பு தப்பியது. அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறினாலும், கடன் பத்திரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இது இந்திய பொருளாதாரத்தில் உள்ள ஸ்திரத்தன்மையை காட்டுவதோடு, ரூபாய்க்கு ஆதரவாக செயல்படுகிறது. கணிப்பு: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 88.40க்கு முன்னேறினால், மேலும் வலுப்பெற்று 88.00 - -87.70ஆக உயரக்கூடும். அதேநேரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் 88.80 --- 89.00 தடுப்பாக அமைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ