உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஆங்கர் முதலீடு உச்ச வரம்பை உயர்த்தியது செபி

ஆங்கர் முதலீடு உச்ச வரம்பை உயர்த்தியது செபி

நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், உள்நாட்டு நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட ஆங்கர் முதலீட்டாளர்கள், முதலீடு செய்வதற்கான வரம்பை, 33 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக செபி உயர்த்தியுள்ளது. ஐ.பி.ஓ.,வில் முதலீடு செய்யும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகள், காப்பீட்டு நிறுவனங்கள், பென்ஷன் பண்டுகள் போன்றவை, ஆங்கர் முதலீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றன. அந்தவகையில், ஆங்கர் பங்கு முதலீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதில், 33 சதவீதம் மியூச்சுவல் பண்டுகள் முதலீடு செய்யவும்; மீதமுள்ள 7 சதவீதத்தில் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பென்ஷன் பண்டுகள் முதலீடு செய்யவும் செபி அனுமதி வழங்கியுள்ளது. புதிய பங்கு வெளியீடுகளில், நீண்ட கால முதலீட்டாளர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க இந்த மாற்றங்கள் உதவும் என செபி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை