| ADDED : நவ 20, 2025 12:41 AM
வங்கி உள்ளிட்ட நிதித்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள '1600' என்ற எண்ணை பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை, டிராய் அறிவித்துள்ளது. வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பங்கு தரகு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களும் இந்த எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மோசடி அழைப்புகளில் சிக்குவதை தடுக்கவும், உண்மையான சேவைகளை அடையாளம் காணவும் இது உதவும் என, டிராய் கூறியுள்ளது. காலக்கெடு பொதுத் துறை, தனியார் வங்கிகள் : 01.01.2026 மியூச்சுவல், பென்ஷன் பண்டுகள் : 15.02.2026 தகுதி வாய்ந்த தரகு நிறுவனங்கள் : 15.03.2026 காப்பீடு நிறுவனங்கள் : பின்னர் அறிவிக்கப்படும்