டாடா இன்வெஸ்ட்மென்ட் பங்கு 10,000 ரூபாயை தொட்டது
நே ற்றைய பங்கு வர்த்தகத்தில், 'டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்'டின் ஒரு பங்கின் விலை 13 சதவீதம் உயர்ந்து, 10,000 ரூபாயைத் தொட்டது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த நிறுவனம் டாடா கேப்பிட்டல் உள்ளிட்ட பல்வேறு டாடா நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. டாடா கேபிட்டல் ஐ.பி.ஓ., வரும் 6ம் தேதி துவங்க உள்ளது. இந்த புதிய பங்கு வெளியீட்டின்போது டாடா சன்ஸும், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனும் தான், தங்களுக்கு உள்ள உரிமத்தில் ஒரு பகுதியை விற்பனை செய்யப் போகின்றன. அதனால், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனின் பங்குகள் நன்கு உயர்ந்தன. மேலும் டாடா இன்வெஸ்ட்மென்ட் 1:10 விகிதத்தில் பங்கு பிரிப்பும் செய்யவிருக்கிறது. அக்டோபர் 14 அன்று இதற்கான ரெகார்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனாலும், இந்நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. இன்னொரு விஷயம், கடந்த ஒரு மாதத்தில், நிப்டி மிட்கேப் பங்குகளின் பட்டியலில், அதிகபட்சமாக 45 சதவீத அளவுக்கு விலை உயர்ந்ததும் இந்த டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் தான்.