உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வெள்ளி இ.டி.எப்., டாடா மீண்டும் துவக்கம்

வெள்ளி இ.டி.எப்., டாடா மீண்டும் துவக்கம்

வெள்ளி இ.டி.எப்., திட்டங்களில் முதலீட்டை மீண்டும் துவங்கலாம் என, 'டாடா மியூச்சுவல் பண்டு' நிறுவனம் அறிவித்துள்ளது. வெள்ளி, தினம் ஒரு உச்சம் என விலை உயர்வை கண்டு வந்ததை அடுத்து, பல மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், தங்களுடைய வெள்ளி இ.டி.எப்., திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன. டாடா மியூச்சுவல் பண்டு நிறுவனமும் எஸ்.ஐ.பி., - எஸ்.டி.பி., ஆகிய திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதை, கடந்த 14ம் தேதி முதல் நிறுத்துவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெள்ளி விலை குறைந்து வருவதை அடுத்து, 'டாடா சில்வர் இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு' திட்டத்தில், அனைத்து வகை புதிய முதலீடுகளும் அக்டோபர் 24ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிற பண்டு நிறுவனங்களும் முதலீட்டை மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை