உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: 23,534 புள்ளிக்கு மேலே சென்றால் மட்டுமே ஏற்றம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 23,534 புள்ளிக்கு மேலே சென்றால் மட்டுமே ஏற்றம்

நேற்று 28 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 77 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17-ல் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 0.44 சதவீத உயர்வுடனும், 'நிப்டிமிட்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 0.25 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்' குறியீடு அதிக பட்சமாக 0.95 சதவீதம் அதிகரித்தும், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிக பட்சமாக 0.88 சதவீதம் குறைந்தும் முடிவடைந்தன. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,647 நிறுவனங்களின் பங்குகளில் 1,924 ஏற்றத்துடனும்; 1,592 இறக்கத்துடனும்; 131 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி ஒரு பலவீனமான பியரிஷ் டெக்னிக்கல் சூழலிலேயே நிறைவடைந்துள்ளது. குறுகிய கால ஏற்றத்திற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்ற போதிலும் அதை உறுதியாக கூறுவதற்கான சூழல் இல்லை. தற்போதைய சூழலில் 23,405-23,534 லெவல்கள் முக்கிய ரெசிஸ்டென்ஸாக உருவெடுத்துள்ளன.

Galleryஎம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., பலவீனமான மொமென்டத்தை காட்டுகின்றன. ஸ்டொக்காஸ்ட்டிக் மட்டும் டெக்னிக்கல் ரெக்கவரி வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதை காட்டுகிறது. உடனடி சப்போர்ட் 23,000-த்தில் இருக்கிறது. நிபடி 23,000-க்கும் கீழே சென்றால் 22,876 வரை இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. 23,534-க்கு மேலே சென்றால் குறுகிய கால டெக்னிக்கல் சூழலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுவரை தற்போதைய பலவீனமான டெக்னிக்கல் சூழலே தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை