டெக்னிக்கல் அனாலிசிசஸ் : 23,800ஐ தாண்டாத வரை ஏறுவது கடினம்
நேற்று 113 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, சிறு சிறு மீட்சிகளை கண்டு 2 மணிக்கு மேல் தொடர்ந்து இறங்கி நாளின் இறுதியில் 203 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்த பட்சமாக 0.15 சதவீத சரிவுடனும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.72 சதவீத வீழ்ச்சியுடனும் முடிவடைந்ததன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 1 குறியீடு ஏற்றத்துடனும்; 20 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிக பட்சமாக 1.79 சதவீதம் அதிகரித்தும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 3.24 சதவீதம் சரிந்தும் காணப்பட்டன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,676 நிறுவனங்களின் பங்குகளில் 1,481 ஏற்றத்துடனும்; 2,092 இறக்கத்துடனும்; 103 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.