மேலும் செய்திகள்
24,260-ஐ நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது
26-Jun-2026
நேற்று 85 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி, வர்த்தகத்தின் இறுதியில் 80 புள்ளிகள் சரிந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 14 குறியீடுகள் உயர்ந்தும்; 4 குறைந்தும் காணப்பட்டன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.06 சதவீதம் அதிகரித்தும், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.24 சதவீதம் வீழ்ச்சியுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.45 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.73 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,411 நிறுவனங்களின் பங்குகளில் 1,919 உயர்ந்தும்; 1,383 சரிந்தும்; 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி கன்சாலிடேஷன் நிலைமையிலேயே தொடர்ந்து வருகிறது. 20, 21 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு மேலேயும், 14 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேயும் நிறைவடைந்திருப்பது இதை ஓரளவுக்கு உர்ஜிதம் செய்கிறது.
26-Jun-2026