உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் : திசை தெரியா நிலை,- திடீர் ஏற்றம் இரண்டுக்கும் வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் : திசை தெரியா நிலை,- திடீர் ஏற்றம் இரண்டுக்கும் வாய்ப்பு

நிப்டி இறக்கத்தில் துவங்கிய நிப்டி, வர்த்தகத்தின் இடையே, இறக்கத்தில் இருந்து மீள முயற்சித்து தோல்வியடைந்து, நாளின் இறுதியில் 120 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 12 இறக்கத்துடனும்; 4 ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' அதிகபட்சமாக 1.96 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி டோட்டல் மார்க்கெட்' குறியீடு குறைந்த பட்சமாக 0.03 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.30 சதவிகித இறக்கத்துடன் நிறைவடைந்திருந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ் குறியீடு அதிக பட்சமாக 1.31 சதவிகித ஏற்றத்துடனும் நிப்டி ஐடி குறியீடு அதிக பட்சமாக 1.19 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,208 பங்குகளில், 1,987 ஏற்றத்துடனும்; 1,127 இறக்கத்துடனும்; 94 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி கண்ட இறக்கம் மிகவும் துல்லியமாக, எந்த அளவுக்கு வரவேண்டுமோ அந்த அளவிற்கு இருப்பதால், திடீர் ஏற்றத்திற்கான வாய்ப்பு டெக்னிக்கலாக உருவாகியுள்ளது. திசை தெரியா நிலையும் வந்துபோவதற்கான அறிகுறிகளும் சற்று மறைவில் உள்ளது எனலாம். 25,700-க்கு மேலேயே இருக்கிற வரை பெரிய இறக்கதிற்கான வாய்ப்பு குறைவே. மேலே செல்ல 26,000 என்ற லெவலை வால்யூமுடன் கடக்க வேண்டும். நிப்டி பேங்க் ஆரம்பத்தில் நல்லதொரு இறக்கத்துடன் துவங்கிய நிப்டி, மதியம் சிறிது நேரம் இறக்கத்தில் இருந்து மீண்டு, மேலே சென்று பின்னர் நாளின் இறுதியில் 16 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. திசை தெரியா நிலை அல்லது சிறியதொரு ஏற்றம் என்ற இரண்டுக்கும் இடையில்தான், டெக்னிக்கல் சமிக்ஞைகள் இருக்கின்றன. 60,000- புள்ளிகளை தாண்டினால் மட்டுமே ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை