மேலும் செய்திகள்
23,600 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது
12-May-2026
நிப்டி நேற்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் துவக்கிய நிப்டி, வர்த்தகத்தின் இறுதியில் 277 புள்ளிகள் அதிகரித்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 17 உயர்வுடனும்; 1 மட்டும் குறைந்தும் முடிந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 150' குறியீடு அதிகபட்சமாக 1.18 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.03 சதவீதமும் உயர்ந்து நிறைவடைந்தன. 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு மட்டும் 0.01 சதவீத சரிவுடன் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 19 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 2.74 சதவீதம் உயர்ந்தும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.19 சதவீதம் வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டன.
12-May-2026