UPDATED : ஜன 01, 2026 03:10 AM | ADDED : ஜன 01, 2026 03:09 AM
ஆரம்பத்தில் இருந்தே ஏற்றம் கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 190 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் அனைத்தும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.41 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.78 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு, அதிகபட்சமாக 2.66 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.30 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.வர்த்தகம் நடந்த 3,250 பங்குகளில், 2,221 ஏற்றத்துடனும்; 935 இறக்கத்துடனும்; 94 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏற்றம் தொடர 26,300 என்ற லெவலை தாண்ட வேண்டும். செய்திகள் சாதகமாக இருந்தால் இது சாத்தியம். 25,900-க்கு கீழ் இறங்கினால் சற்று இறக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.