மேலும் செய்திகள்
ஓய்வெடுத்த காளை
24-Nov-2026
இந்திய பங்கு சந்தைகள், நேற்றைய வர்த்தகத்தில் மீட்சியை பதிவு செய்தன. அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் வரவு, கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது ஆகிய காரணங்களால் சந்தை குறியீடுகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை உயர்ந்தன. வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்ந்து 83,938 புள்ளிகளில் நிலைகொண்டது. இதேபோல், நிப்டி 467 புள்ளிகள் ஏற்றம் கண்டு 25,819 புள்ளிகளில் முடிவடைந்தது. காரணங்கள்
1 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 0.70 சதவீதம் வலுவடைந்து 92.23 ஆக முடிவடைந்தது 2 சர்வதேச சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழலுக்கு இடையே, அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருவது 3 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது 4 ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டிகோ, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஹெச்.டி.எப்.சி., வங்கி மற்றும் ஐ.டி.சி.,’ ஆகிய முன்னணி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்தது.
24-Nov-2026