நிப்டி
ஆரம்பம் முதலே ஏற்றத்துடன் பயணித்த நிப்டி, 1:00 மணிக்கு மேல் இறங்க ஆரம்பித்து, 3:00 மணியளவில் இழந்த புள்ளிகளில் இருந்து மீட்சி கண்டு, நாளின் இறுதியில் 10 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 3 ஏற்றத்துடனும்; 10 இறக்கத்துடனும்; 3 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 0.16 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 0.57 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.இதில், 'நிப்டி மீடியா' குறியீடு, அதிகபட்சமாக 0.84 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு குறைந்தபட்சமாக 0.05 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு, அதிகபட்சமாக 0.73 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தன.வர்த்தகம் நடந்த 3,191 பங்குகளில் 1,485 ஏற்றத்துடனும்; 1,597 இறக்கத்துடனும்; 109 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான டெக்னிக்கல் சூழலே நிலவுகிறது என்ற போதிலும், சமீபத்திய அனுபவங்களை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது, இறக்கம் வந்து, பின்னர் ஏறுவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது. அப்படி இறக்கம் வந்தால், 26,050-க்கு கீழே சென்று வர்த்தகமாகாதவரை, நிப்டி புல்லிஷாக இருக்கிறது என்றே கொள்ள வேண்டும். நிப்டி பேங்க்
ஆரம்பத்தில் ஏற்றத்தில் துவங்கிய நிப்டி பேங்க், ஏற்றத்துடன் நடைபெற்று, 1:30 மணியளவில் கிட்டத்தட்ட ஏற்றம் கண்ட புள்ளிகள் அனைத்தையும் இழந்து, பின்னர் மீண்டும் ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 209 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. டெக்னிக்கலாக இறங்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்ற போதிலும், நாளின் இடையில் இறக்கங்கள் வந்து மீள்வதற்கான வாய்ப்புகள் தென்படுகிறது. Gallery