88 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய அமெரிக்க அரசின் தங்க கையிருப்பு
அ மெரிக்க கருவூலத்தின் தங்க கையிருப்பு மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிமாக உயர்வைக் கண்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத்தட்ட 88 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவின் போர்ட் நாக்ஸ் மற்றும் பிற பாதுகாப்புப் பெட்டகங்களில் சேமிக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு 8,133 டன்களுக்கும் அதிகமாகும். அமெரிக்காவின் தங்கக் கையிருப்பின் பெரும் பகுதி போர்ட் நாக்ஸில் சேமிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 4,000 டன் தங்கம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தங்கத்தின் விலை 45 சதவீதம் உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு $3,825 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அமெரிக்க அரசின் தங்க இருப்பின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலரை தாண்டிஉள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி, உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்தத் தங்கத்தின் அளவு 36,344 டன்கள். இதில் இந்தியாவின் தங்க கையிருப்பு மட்டும் ஜூன் மாத நிலவரப்படி 876.18 டன்னாக உள்ளது.