உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / உங்க மனசுல என்ன தோணுது?

உங்க மனசுல என்ன தோணுது?

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த மாதத்தில், இதுவரை 25 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து, கிட்டத்தட்ட 13,300 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளன.

இதற்கு முன் 1997 ஜனவரியில் தான், அதிகபட்சமாக 28 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தன. மேலும், கடந்த 6 மாதங்களில் 53 சிறு, குறு நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டு, 9,129 கோடி ரூபாய் திரட்டியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன் என்ன நினைக்கிறார்...? முன்பெல்லாம் ஐ.பி.ஓ., என்றால், விளம்பரங்கள், கையேடுகள் வாயிலாக தெரிந்தால்தான் உண்டு. அதுவும், அவற்றை பங்குத் தரகு நிறுவனங்களில் பார்த்து தெரிந்துகொள்வது தான் அதிகம். அதன் பிறகு, அங்கேயே படிவங்களை நிரப்பி விண்ணப்பித்த காலம் அது. இப்போது போனை ஒரு விரலில் தட்டி, ஒரு நிமிடத்தில் ஐ.பி.ஓ.,வில் விண்ணப்பித்து விடும் வசதிகள் வந்துவிட்டன. ஐ.பி.ஓ.,க்கள் அதிகரிப்பது, தொழில் துறை வளர்ச்சியின் ஒரு குறியீடாக கருதலாம். அதிகரிக்கும் நிறுவனங்கள், தங்கள் விரிவாக்கம் உள்ளிட்ட தேவைகளுக்கு சந்தைக்கு வருகின்றன. ஆனால், இவை அனைத்தும், பங்கு வணிகத்தில் லாபத்தை தருமா என்றால், அதை உறுதியாக கூற இயலாது. பங்குகள் பட்டியலிடப்படும்போது லாபம் கிடைத்தாலும் கூட, அதன் பிறகு உத்தரவாதமில்லை. இதற்கு பல முந்தைய ஐ.பி.ஓ.,க்கள் உதாரணம். தொழில்நுட்ப வசதிகள் எவ்வளவு முன்னேறினாலும், பங்கு முதலீடு என்பது, சந்தை அபாயத்துக்கு உட்பட்டதே. காலம் மாறினாலும் இது மட்டும் மாறாத ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி