உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / லிக்விட் பண்டில் இருந்தும் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம்

லிக்விட் பண்டில் இருந்தும் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம்

சமீபத்தில் மியூச்சுவல் பண்டில் இருந்து பணம் செலுத்தும் வசதி அறிமுகம் ஆகியிருக்கிறது. பொதுவாக, யு.பி.ஐ. செயலிகள் உங்களுடைய வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டு இருக்கும். பொருட்களை வாங்கும்போதோ, வேறு பரிவர்த்தனைகளைச் செய்யும் போதோ, வங்கியில் இருந்து யு.பி.ஐ., வாயிலாக பணம் உரியவருக்கு வழங்கப்படும். இப்போது, குறுகிய கால லிக்விட் மியூச்சுவல் பண்டு வைத்துள்ளவர்கள், தங்கள் பண்டில் இருந்தே, யு.பி.ஐ. வாயிலாக பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. அதிக வருவாய் வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்குக்கு பொதுவாக 3 சதவீதத்துக்கு மேல் வட்டி கிடைக்காது. ஆனால், குறுகிய கால லிக்விட் மியூச்சுவல் பண்டுகள் 7 சதவீதம் வரை வருவாய் ஈட்டித் தருகின்றன. இந்தப் பண்டுகள், அரசின் கடன் பத்திரங்கள், கருவூல பில்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் முதலீடு செய்து, சேமிப்புக் கணக்கை விட சற்றே அதிகமான வருவாயை ஈட்டித் தர முயல்கின்றன. இத்தகைய குறுகிய கால லிக்விட் பண்டுகள் தான் தற்போது யு.பி.ஐ.யோடு கைகோர்த்துள்ளன. நீங்கள் ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்றால், லிக்விட் பண்டுகளில் உள்ள யூனிட்டுகளை விற்பனை செய்து, அந்தப் பணத்தை யு.பி.ஐ. வாயிலாக உரியவருக்குக் கொடுக்கலாம். இவையெல்லாம் ஒருசில நிமிடங்களிலேயே நடந்துவிடும். முன்பெல்லாம் ஒரு பண்டின் யூனிட்டுகளை ரிடீம் செய்தால், அந்தத் தொகை, வங்கிக் கணக்குக்குப் போகும். அதன் பின்னரே உங்களால் பயன்படுத்த முடியும். மற்றொரு வங்கி கணக்கு புதிய திட்டத்தின் படி, அந்தத் தொகை வங்கி கணக்குக்குப் போகவேண்டியதே இல்லை. உங்கள் லிக்விட் மியூச்சுவல் பண்டே மற்றொரு வங்கிக் கணக்கு மாதிரி செயல்படும். எவ்வளவு யூனிட்டுகளை விற்பனை செய்கிறீர்களோ, அதற்கு உரிய தொகை தான் யு.பி.ஐ. வாயிலாக வெளியே வரும். மீதமுள்ள தொகை, லிக்விட் பண்டுகள் என்ன வருவாயை ஈட்டித் தருமோ, அதைப் பெற்றுக்கொண்டு சவுக்கியமாக இருக்கும். இப்போதைக்கு குறிப்பிட்ட சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்களே இந்த வசதியை வழங்கி உள்ளன. தனிநபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர், தம்மிடம் உள்ள தொகையை சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொள்ளாமல், குறுகிய கால லிக்விட் பண்டுகளில் வைத்திருப்பது இப்போது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு கூடுதல் வருவாய்க்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும். உடனடியாக செலவு செய்வதற்கு யு.பி.ஐ. வசதியும் கைகொடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி