உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தொழில் முனைவோர் விருது விண்ணப்பிக்க அரசு அழைப்பு

தொழில் முனைவோர் விருது விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை: தமிழகத்தில், 2023 - 24ல் சிறப்பாக செயல்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறந்த தொழில்முனைவோர் உட்பட ஆறு பிரிவுகளில், தமிழக அரசு விருது வழங்க உள்ளது. தமிழகத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் வாயிலாக, ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலைபெற்றுள்ளனர். உள்நாடு மற்றும் உலக சந்தைகளில் போட்டி தன்மையுடன் இருக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான நடவடிக்கைகள் வாயிலாக முன்னேற்றம் கண்டுள்ள தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை விருது வழங்குகிறது.அதன்படி, 2023 - 24ல் சிறப்பாக செயல்பட்ட தொழில்முனைவோர்களுக்கு, மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுக்கு விண்ணப்பிக்க, அரசு அழைப்பு விடுத்துள்ளது.இந்த விருதுகள், மாநில அளவிலான சிறந்த வேளாண் தொழில்முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருது, சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த தொழில்முனைவோர் விருது ஆகிய பிரிவில் வழங்கப்படுகிறது.இதுதவிர, மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதிக்கான விருது, மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, மாவட்ட அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருது என, மொத்தம் ஆறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “விருது பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள், பேம் டி.என்., இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வரும் 20ம் தேதி கடைசி நாள். உயர்மட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, விருது பெறும் நிறுவனங்களை தேர்வு செய்யும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை