உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மின்சார வர்த்தக வாகன உற்பத்தி ஜே.எஸ்.டபிள்யு., புதிய ஆலை

மின்சார வர்த்தக வாகன உற்பத்தி ஜே.எஸ்.டபிள்யு., புதிய ஆலை

புதுடில்லி : ஜே.எஸ்.டபிள்யு., குழும நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யு., கிரீன் டெக் நிறுவனம், மஹாராஷ்டிராவில் 1,487 கோடி ரூபாயில் மின்சார வாகன ஆலையை அமைக்கவுள்ளது. எம்.ஜி., நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில், மின்சார பஸ்கள் மற்றும் லாரிகளை இந்த ஆலையில் உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் தொழில் துறை நகரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10,000 மின்சார பேருந்துகள் மற்றும் 5,000 மின்சார லாரிகளை இங்கு உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை விற்பதன் வாயிலாக, ஜே.எஸ்.டபிள்யு., குழுமம் கூடுதல் முதலீடு செய்ய உள்ளது.வாகன உற்பத்தி மட்டுமின்றி, பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மின்சார வாகன சந்தையில் முழுமையான வாகன நிறுவனமாக தனித்து நிற்க, இது போன்ற முன்னெடுப்புகளை இந்நிறுவனம் எடுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !