உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஜூலை எஸ்.ஐ.பி., முதலீடுகள் ரூ.23,000 கோடியை கடந்தது

ஜூலை எஸ்.ஐ.பி., முதலீடுகள் ரூ.23,000 கோடியை கடந்தது

புதுடில்லி:மியூச்சுவல் பண்டுகளில், சீரான முறையில் முதலீடு செய்ய வழி வகுக்கும் எஸ்.ஐ.பி., முறையில், கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, முதல் முறையாக 23,000 கோடி ரூபாயை கடந்துள்ளது. கடந்த மாதம், ஒட்டுமொத்தமாக மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ஒன்பது சதவீதம் குறைந்திருந்தாலும், எஸ்.ஐ.பி., முதலீடுகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 9.40 சதவீதம் சரிந்து, 37,113 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த மியூச்சுவல் பண்டு கணக்குகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 19.84 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியதாகவும் ஆம்பி தெரிவித்துஉள்ளது. எஸ்.ஐ.பி., முதலீடுஜூன் ரூ. 21,262 கோடிஜூலை ரூ.23,332 கோடிஜூலையில் துவங்கிய கணக்குகள் 73 லட்சம்மொத்த எஸ்.ஐ.பி., கணக்குகள் 9.34 கோடிஜூனில் நிர்வகிக்கப்பட்ட சொத்து 12.43 லட்சம் கோடிஜூலையில் நிர்வகிக்கப்பட்ட சொத்து 13.09 லட்சம் கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி