மேலும் செய்திகள்
டாப் கியரில் வாகன ஏற்றுமதி
27-Oct-2025
ஐ.பி.ஓ., ெவளியிட டாடா சன்ஸ் மறுப்பு
16-Oct-2025
கடந்த 2022ம் ஆண்டு துவங்கப்பட்ட, 'சாய் சுவாமி மெட்டல்ஸ் அண்டு அலாய்ஸ்' நிறுவனம், பல்வேறு வகையான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகிறது.அகமதாபாதை சேர்ந்த இந்நிறுவனம், 'டால்பின்' எனும் பிராண்டின் கீழ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சாதனங்கள் மற்றும் சமையல் சாதனங்களை தயாரித்து வருகிறது.திரட்டப்படவுள்ள நிதி, இயந்திரங்கள் கொள்முதல், துணை நிறுவனங்களில் முதலீடு என நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகையிலிருந்து, 6 கோடி ரூபாயை நடைமுறை மூலதன செலவுகளுக்காகவும், 4 கோடி ரூபாயை துணை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் செலவுகளுக்காகவும், 2 கோடி ரூபாயை நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.நிதி நிலவரம்கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 33.33 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 1.79 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 30.04.24முடியும் நாள் : 03.05.24பட்டியலிடும் நாள் : 08.05.24பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., மற்றும் எஸ்.எம்.இ.,பங்கு விலை : ரூ.60பங்கின் முகமதிப்பு : ரூ.10புதிய பங்கு விற்பனை : 25 லட்ச பங்குகள்திரட்டபடவுள்ள நிதி : ரூ.15 கோடி
27-Oct-2025
16-Oct-2025