மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
நாட்டின் சரக்கு ஏற்றுமதி 7% உயர்வு
16-Sep-2025
புதுடில்லி: நடப்பு மாதத்தின் முதல் பாதியில், அன்னிய முதலீட்டாளர்கள், நாட்டின் நிதித்துறை பங்குகளிலிருந்து 14,790 கோடி ரூபாய் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். அமெரிக்காவில் மந்தநிலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு புறமிருக்க, மற்றொரு புறம், வங்கிகளின் ஜூன் காலாண்டின் சுமாரான முடிவுகள், டிபாசிட் வளர்ச்சி குறித்த கவலைகள் மற்றும் ரொக்க இருப்பு குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் ஆகியவை, முதலீட்டாளர்கள் நிதித்துறை சார்ந்த பங்குகளில் ஆர்வம் காட்டவில்லை. அதேவேளையில், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் சுகாதாரம் மற்றும் நுகர்வோர் துறை சார்ந்த பங்குகளில் குறிப்பிட்ட அளவு முதலீடு செய்தனர். நிதித்துறை சார்ந்த பங்குகளிலேயே அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். நெருக்கடியான சூழல் ஏற்படும்போது இத்துறை சார்ந்த பங்குகளையே முதலில் விற்கின்றனர். கடந்த ஜூலை மாத நிலவரப்படி நிதித் துறை சார்ந்த பங்குகளில் 27.48 சதவீதமாக இருந்த அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு, கடந்த 15ம் தேதி நிலவரப்படி 27.28 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தொழில்நுட்பத்துறை சார்ந்த பங்குகளில் 9.33 சதவீதம் முதலீடு செய்துஉள்ளனர். இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளிலிருந்து 10,073 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர். இதுவே ஒரே நாளில் இவர்கள் திரும்பப் பெற்ற மூன்றாவது அதிகபட்ச தொகையாகும். அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் கவலை அளிக்கும்படியாக இருந்ததால், ஆகஸ்ட் 5ம் தேதி உலகளவில் அனைத்து பங்குச் சந்தைகளும் கடும் சரிவு கண்டன. அன்று மட்டும் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025
16-Sep-2025