உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மறுசுழற்சி நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவு தனி கொள்கை வெளியிட தமிழக அரசு பேச்சு

மறுசுழற்சி நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவு தனி கொள்கை வெளியிட தமிழக அரசு பேச்சு

சென்னை:பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க, 'சுழற்சி பொருளாதார ஊக்குவிப்பு கொள்கை' வெளியிடுவது தொடர்பாக, தமிழக வழிகாட்டி நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.நாட்டில், மோட்டார் வாகனங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தியில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தற்போது, மின்சார வாகனங்கள் துறையில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவங்கி வருகின்றன.சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பிளாஸ்டிக், மின்சார வாகன பேட்டரி, பழைய வாகனங்கள் போன்றவற்றின் கழிவுகளில் இருந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ஊக்குவிப்புஇதற்காக, அந்த துறையில் முதலீடுகளை அதிகரிக்க, 'சர்குலர் எகானமி' எனப்படும் சுழற்பொருளாதார சூழல் அமைப்பை அடிப்படையாக கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்பட உள்ளது.அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள், தொழில் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பழைய வாகனம், பிளாஸ்டிக், பேட்டரி போன்றவற்றின் கழிவுகளால் மாசு ஏற்படுகிறது. அந்த கழிவில் இருந்து மறு பயன்பாட்டிற்கான பொருட்களை தயாரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க முடியும்.இந்த துறையில் முதலீட்டை அதிகரிக்க, தமிழக சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முதல் கட்டமாக, பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. அவை, தங்களின் கருத்துகளை தெரிவித்தன.ஆலோசனைஇதைதொடர்ந்து, முன்னணி கல்வி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், அந்த கொள்கையை அமல்படுத்தியுள்ள பிற மாநிலங்கள் ஆகியவற்றுடன் ஆலோசிக்கப்படும்.அதைதொடர்ந்து, மானியம் வழங்குவது, சலுகை விலையில் நிலம் போன்றவற்றுடன் கூடிய, ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய கொள்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பிளாஸ்டிக், மின்சார வாகன பேட்டரி, பழைய வாகனங்கள் போன்றவற்றின் கழிவுகளில் இருந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை