உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டாடா வழியில் லோதா குழுமம் சமூக பணிக்கு ரூ.20,000 கோடி

டாடா வழியில் லோதா குழுமம் சமூக பணிக்கு ரூ.20,000 கோடி

மும்பை:மும்பையைச் சேர்ந்த சர்வதேச கட்டுமான நிறுவனமான 'லோதா' குழுமம், சமூகநலப் பணிகளுக்காக 20,000 கோடி ரூபாயை, தனது அறக்கட்டளைக்கு வழங்க முன்வந்துள்ளது.லோதா குழும நிறுவனமான 'மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அபிஷேக் லோதா மற்றும் அவர் குடும்பத்தினர், தங்கள் வசமுள்ள பங்குகளில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, இந்த ஆண்டு தீபாவளியையொட்டி, லோதா அறக்கட்டளைக்கு மாற்றித் தர முன்வந்துள்ளனர். இதன் வாயிலாக, மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் ஐந்தில் ஒரு பகுதி, லோதா அறக்கட்டளையிடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக, டாடா குழும நிறுவனங்களின் பெரும் பங்கு, டாடா அறக்கட்டளையான, 'டாடா டிரஸ்ட்ஸ்' வசமானது. இது, இந்திய நிறுவனங்களின் சமூகநலப் பணிக்கான முன்னுதாரணமானது. சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்பு என்பதை அரசு வலியுறுத்துவதற்கு முன்பே நடந்த டாடாவின் பங்கு மாற்றத்தால், அறக்கட்டளை வாயிலாக ஏராளமான சமூக நலப் பணிகள் நடைபெற்றன. அந்த வரிசையில், லோதா குழுமமும் தற்போது தனது அறக்கட்டளைக்கு அதிக மதிப்பிலான பங்குகளை இடமாற்றம் செய்திருக்கிறது.மகளிருக்கு அதிகாரமளித்தல், குழந்தைகள் நலன், கல்வி மற்றும் பசுமை அதிகரிப்பு, கலாசார நிகழ்வுகளுக்கு லோதா அறக்கட்டளை செலவு செய்கிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ