மேலும் செய்திகள்
ஊராட்சி மன்றம் கட்ட நிதி ஒதுக்கீடு
23-Apr-2025
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் ஊராட்சியில், சடச்சிவாக்கம், ஆதிதிராவிடர் குடியிருப்பு, வாடாதவூர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள, வாடாதவூர் கிராமத்தில் சமத்துவ சுடுகாடு உள்ளது. இந்த கிராமத்தில் உயிரிழந்தவர்களை, இந்த சுடுகாட்டில் புதைத்தும், எரி மேடையில் வைத்து எரித்தும் வருகின்றனர்.இந்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட உடல்களை எரியூட்ட வரும்போது, பொதுமக்கள் சுடுகாட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, அப்பகுதிவாசிகள் சுடுகாட்டில் காத்திருப்பு கூடம் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமத்துவ சுடுகாட்டில் காத்திருப்பு கூடம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
23-Apr-2025