உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பட்ஜெட் எதிர்பார்ப்பால் ஏற்றம்

பட்ஜெட் எதிர்பார்ப்பால் ஏற்றம்

• வாரத்தின் ஐந்தாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ச்சியாக நான்காவது நாளாக, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. வாராந்திர அடிப்படையில், சந்தை குறியீடுகள் மூன்று வாரங்கள் சரிவை கண்ட நிலையில், இந்த வாரம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த 24 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில், அதிகபட்ச இழப்பை பதிவு செய்துள்ளது• பொருளாதார ஆய்வறிக்கையில் ஜி.டி.பி., வளர்ச்சி குறித்த கணிப்புகள், மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன், சில நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளும் கைகொடுக்கவே, முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால், நிப்டி, சென்செக்ஸ் தலா ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன• நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, எனர்ஜி குறியீடு 2.63 சதவீதமும்; நுகர்பொருட்கள் குறியீடு 2.04 சதவீதமும்; ரியல் எஸ்டேட் குறியீடு 1.94 சதவீதமும்; எண்ணெய்மற்றும் எரிவாயு துறை குறியீடு 1.87 சதவீதமும் உயர்வு கண்டன• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,741 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,182 நிறுவன பங்குகள்குறைந்தும்; 124 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின• மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, இன்று பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள், 1,189 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.26 சதவீதம் குறைந்து, 76.64 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி, 86.62 ரூபாயாக இருந்ததுடாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை டாடா கன்ஸ்யூமர் பெல்  டிரென்ட்  கோல் இந்தியா எல் அண்டு டி.,அதிக இறக்கம் கண்டவை பார்தி ஏர்டெல்  ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் ஜே.எஸ்.டபுள்யு.,ஸ்டீல்  ஐ.சி.ஐ.சி.ஐ.,பேங்க் பஜாஜ் பின்சர்வ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMESH
பிப் 02, 2025 12:01

தேர்தல்.. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு வாரி கொடுப்பார் மோடி என்று கூறும் ஸ்டாலின்.. பொங்கல் பரிசாக 1000 ருபாய் கேட்டதற்கு தேர்தல் நேரத்தில் முதல்வர் அறிவிப்பார்.இந்த ஆண்டு தேர்தல் இல்லை இலவசம் இல்லை என துரைமுருகன் கூறினாரே அப்ப மெளனமாக இருந்த முதல்வர் இப்போது கொதிக்கிறார். உனக்கு ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி...


புதிய வீடியோ