பருத்தி நுாலிழை ஏற்றுமதி சரிவு
திருப்பூர்: சர்வதேச சந்தையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில், பருத்தி பஞ்சு விலை அதிகமாக இருப்பதால், கடந்த மூன்று மாதங்களில் பருத்தி நுாலிழை மற்றும் துணி ஏற்றுமதியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.பஞ்சு விலை உயர்வு:
சர்வதேச சந்தையில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு கேண்டி பஞ்சு 56,800 -57,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. https://x.com/dinamalarweb/status/1947832561063104889பாதிப்பு
* பஞ்சு விலை உயர்வு காரணமாக பருத்தி நுாலிழை, பருத்தி துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது. *செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியும் மந்தமாகியுள்ளது. *விலை வேறுபாடு இந்திய நுாற்பாலை உரிமையாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் சவாலாக உள்ளது.