கூகுள் ஜெமனய் ஏ.ஐ., ப்ரோ ஜியோ பயனர்களுக்கு இலவசம்
ஜியோ 5ஜி பயனர்களுக்கு, 35,100 ரூபாய் மதிப்பிலான கூகுள் ஏ.ஐ., ப்ரோ உள்ளிட்ட சில வசதிகள், 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 18 - 25 வயதுடைய ஜியோ அன்லிமிடெட் 5ஜி திட்ட சந்தாதாரர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. ஜெமனய் செயலியில் 2.5 ப்ரோ மாடலின் இலவச பயன்பாட்டுடன், 2 டி.பி., கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும், நானோ பனானாவை பயன்படுத்தி அதி நவீன படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.