உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஹாட்ரிக் அடித்த சந்தை

ஹாட்ரிக் அடித்த சந்தை

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக உயர்வுடன் நிறைவு செய்துள்ளன.• அமெரிக்க பெடரல் ரிசர்வ், தன் நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில், கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை என வெளியான தகவல், மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன், சில நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால், முன்னணி நிறுவன பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்• நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், ஏழு துறை பங்குகள் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் குறியீடு 1.78 சதவீதமும்; எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீடு 1.55 சதவீதமும் உயர்வு கண்டன. மாறாக, ஊடகம், தகவல் தொழில்நுட்ப துறை குறியீடு, 1 சதவீதம் இறக்கம் கண்டன• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,149 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,800 நிறுவன பங்குகள் குறைந்தும்; 125 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள், 4,583 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.93 சதவீதம் குறைந்து, 76.77 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்து, 86.62 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை