உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இருசக்கர வாகன விற்பனை: எகிறும் ஹீரோ, இறங்கும் ஹோண்டா

இருசக்கர வாகன விற்பனை: எகிறும் ஹீரோ, இறங்கும் ஹோண்டா

சென்னை: ஜூன் மாதத்தில், இருசக்கர வாகன விற்பனை 1.79 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டில், 15.44 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில், 15.16 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் இடத்தில் நீடிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், ஹீரோவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்திருந்த ஹோண்டா நிறுவனம், மீண்டும் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக இந்நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.https://x.com/dinamalarweb/status/1940969476545302940மே மாத விற்பனையில், 7.40 சதவீதம் வீழ்ச்சி கண்ட நிலையில், கடந்த மாத விற்பனை, 19.43 சதவீதம் அளவுக்கு பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !