உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / முதல் நாளிலேயே 7 சதவீதம் சரிந்த ஹூண்டாய் பங்குகள் விலை

முதல் நாளிலேயே 7 சதவீதம் சரிந்த ஹூண்டாய் பங்குகள் விலை

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார், பொது பங்கு வெளியீடு வாயிலாக 27,870 கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்து, பங்கு ஒன்றின் விலை 1960 ரூபாய் ஆக நிர்ணயித்தது. கடந்த அக்.,18ம் தேதி பங்குகளை ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், நேற்று சந்தையில் பட்டியலிடப்பட்டது. நிர்ணயித்த விலையை விட 1.50 சதவீத தள்ளுபடி விலையில், தேசிய பங்குச் சந்தையில் 1,934 ரூபாய்க்கும், மும்பை பங்குச் சந்தையில் 1,931 ரூபாய்க்கும் அறிமுகமானது. தொடர்ந்து, சந்தை குறியீடுகள் சரிவை கண்டதால், வர்த்தக நேரத்தில் ஹூண்டாய் பங்குகள், கிட்டத்தட்ட ஏழு சதவீதம் அளவுக்கு சரிவடைந்தன. வர்த்தக முடிவில், சிறிது மீண்டு, கிட்டத்தட்ட 5 சதவீத சரிவுடன் நிறைவடைந்தன.பங்கு வெளியீட்டுக்கு பின்னர், 1.48 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன், நாட்டின் ஐந்தாவது அதிக மதிப்புடைய வாகன உற்பத்தி நிறுவனமாக, ஹூண்டாய் மாறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ