இந்தியா - அமெரிக்கா வர்த்தகம் 42.50 லட்சம் கோடி இலக்கு
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், 42.50 லட்சம் கோடி இலக்கை அடைய உதவுவதற்காக நாஸ்காம் புதிய அமைப்பை துவங்கி உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இருநாடுகள் இடையே வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதுமை, டிஜிட்டல் பரிமாற்றம், பொருளாதார வளர்ச்சியுடன், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் பாலமாக நாஸ்காம் யு.எஸ்., சி.இ.ஓ., அமைப்பு துவங்கப்பட்டு உள்ளது. இதன் தலைவராக காக்னிசென்ட் தலைமை செயல் அதிகாரியாக ரவிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.