மேலும் செய்திகள்
குறைந்தது பணவீக்கம் நவம்பரில் 5.48 சதவிகிம்
13-Dec-2024
புதுடில்லி:நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த நவம்பர் மாதத்தில் 5.20 சதவீதம் என்ற ஆறு மாத கால உச்சத்தை எட்டியுள்ளதாக, மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதத்துக்கு பிறகு இதுவே அதிகபட்சமாகும். வளர்ச்சி, கடந்தாண்டு அக்டோபரில் 3.70 சதவீதமாகவும்; கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் 2.50 சதவீதமாகவும் இருந்தது. பண்டிகை காலத்தை ஒட்டி தேவை அதிகரிப்பு மற்றும் தயாரிப்பு துறையின் உற்பத்தி உயர்வு ஆகியவற்றின் காரணமாக, கடந்த நவம்பரில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில் தயாரிப்பு, கட்டுமானம் ஆகிய துறைகளின் வளர்ச்சி அதிகரித்தும்; சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் வளர்ச்சி சரிந்தும் உள்ளன. இதையடுத்து, கடந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியின் சராசரி 4.10 சதவீதமாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 6.50 சதவீதமாக இருந்தது.
13-Dec-2024