மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
புதுடில்லி: 'ஹூண்டாய் மோட்டார்' நிறுவனம், நடப்பாண்டில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், அதன் இந்திய பிரிவான 'ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனத்துக்கு, புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்ட திட்டமிட்டு வருகிறது.அதன்படி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட 2.50 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு, கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் திரட்டப்பட உள்ளது. இந்த மதிப்பீடு, தென் கொரியாவிலுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் பாதிக்கும் மேலாக இருக்கும்.இதுகுறித்து, 'ஜெ.பி., மார்கன், மார்கன் ஸ்டான்லி, சிட்டி, பேங்க் ஆப் அமெரிக்கா' ஆகிய முதலீட்டு வங்கிகளுடன், ஹூண்டாய் பேச்சு நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 2022ம் ஆண்டில், எல்.ஐ.சி., நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய் நிதி திரட்டியது. இதுவரை இந்தியாவில் ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்பட்ட அதிகபட்ச நிதி இதுவே. ஹூண்டாய் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் பட்சத்தில், அது இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வாக அமையும்.ஹூண்டாய் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும்பட்சத்தில், அது இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வாக அமையும்
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025