உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஜியோ பிரைன், ஜியோ ஏ.ஐ கிளவுட்...: புதிய ஏ.ஐ சேவையை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி

ஜியோ பிரைன், ஜியோ ஏ.ஐ கிளவுட்...: புதிய ஏ.ஐ சேவையை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பிரைன் (Brain) தொழில்நுட்பம் மற்றும் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும் 'ஜியோ ஏஐ கிளவுட்' திட்டம் ஆகியவற்றை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தினார்.நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று (ஆக.,29) நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி பேசியதாவது: தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். 2024 பொதுத் தேர்தல் இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்திற்கு அற்புதமான வெற்றியை கொடுத்துள்ளது. இந்த தேர்தல் உலகளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தால் வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது. ஒருபுறம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான முன்னேற்றங்களுடன், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, கணினி, ரோபாட்டிக்ஸ் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றில் நாம் சிறந்த காலங்களில் வாழ்கிறோம். ஏ.ஐ.,யின் வளர்ச்சி, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

விரைவில் அறிமுகம்

மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாயிலாக விரைவில் கொண்டுவரப்படவுள்ள திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அவற்றுள் சில...* ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பிரைன் (Brain) தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.* ஜியோ டிவியில் 860 சேனல்கள் வரை காணலாம். அவற்றில் இனி 7 நாட்கள் வரையிலான முடிந்த நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.* ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும் 'ஜியோ ஏஐ கிளவுட்' திட்டம் தீபாவளி முதல் துவக்கம்.* ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
ஆக 30, 2024 07:47

இவரோட ஸ்மார்ட் டி.வி யை வாங்கி வீட்டில் வெச்சா உங்களோட பர்சனல் தகவல் எல்லாம் அங்கே போய்ச் சேந்துரும்.


தாமரை மலர்கிறது
ஆக 29, 2024 20:01

உலக அளவில் இந்தியாவை முதன்மையாக அம்பானி மாற்றிவருகிறார்.


pv, முத்தூர்
ஆக 29, 2024 21:44

ஆரம்பத்தில் அவர் கொடுப்பது போல் இருக்கும், பின்னர் வட்டியுடன் சேர்த்து வசூலிப்பார். எ.கா: ஆரம்பத்தில் இலவச டேட்டா, அடிமையாகி பிறகு அதே பேக்கின் ரீசார்ஜ் மதிப்பை அதிகரித்தது.


karthikeyan
ஆக 30, 2024 00:51

உலக அளவில் முதன்மை முட்டாள்கள் இருக்கும் இடமாக இந்தியாவை கருதுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை