உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / முக்கிய வங்கிகள் பட்டியல் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

முக்கிய வங்கிகள் பட்டியல் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை:உள்நாட்டு வங்கித்துறை கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கி பட்டியலில், எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகள் இடம்பெற்றுள்ளன.எந்த வங்கிகளின் நஷ்டம் அல்லது நிதி நெருக்கடியால், நிதி நிர்வாக கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலோ, பாதிப்போ ஏற்படக்கூடுமோ, அந்த வங்கிகளை, ரிசர்வ் வங்கி, 2014 ஜூலை முதல் ஆண்டுதோறும் வரிசைப்படுத்துகிறது. கடந்த 2015, 2016 ஆண்டுகளில் எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகள் இதில் இடம்பெற்ற நிலையில், 2017 ல் எச்.டி.எப்.சி., வங்கியும் இந்த வரிசையில் இணைந்தது. அப்போது முதல், இந்த மூன்று வங்கிகளும் தொடர்ந்து இந்த பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. இந்த ஆண்டின் பட்டியலிலும், இந்த மூன்று வங்கிகளும் இடம்பெற்றுள்ளதாக, ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்தது.இந்த வங்கிகள் சந்திக்கும் நஷ்டம் அல்லது நிதி நெருக்கடி, நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி