உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மியூச்சுவல் பண்டு முதலீடு நவம்பரில் 14 சதவிகிதம் சரிந்தது

மியூச்சுவல் பண்டு முதலீடு நவம்பரில் 14 சதவிகிதம் சரிந்தது

புதுடில்லி:கடந்த நவம்பரில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் 35,943 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 'ஆம்பி' எனப்படும், இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்து உள்ளது. அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அளவுக்கு முதலீடு குறைந்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் பல்வேறு பொருளாதார காரணிகளால், நவம்பர் மாதத்தில் சந்தையில் அதிக ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. இதனால், மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யாமல், முதலீட்டாளர்கள், சந்தையின் போக்கை கண்காணித்து வந்தனர். இதனால், நவம்பரில் எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீட்டு வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடு சற்று குறைந்து போனது.ஒட்டுமொத்தமாக, கடந்த நவம்பரில் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வாயிலாக 60,295 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு முந்தைய, அக்டோபரில் இதுவே, 2.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நவம்பரில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிகர சொத்து மதிப்பு 68.08 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. கடந்த அக்டோபரில், இதன் மதிப்பு 67.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், கடந்த நவம்பரில் 35,943 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. இது முந்தைய அக்டோபரில் 41,887 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி