உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

ஜி.என்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் ஐ.பி.ஓ., விலை ரூ.225 - 237

உலகளவில் பழைய லேப்டாப், கம்ப்யூட்டர்களை பழுது நீக்கி, புதுப்பிக்கப்பட்டதாக மாற்றி, எலக்ட்ரானிக்ஸ் பஜார் என்ற பிராண்டு வாயிலாக விற்பனை செய்து வருகிறது, ஜி.என்.ஜி., எலக்ட்ரானிக்ஸ். இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 460 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது. புதிய பங்கு விற்பனை வாயிலாக 400 கோடி ரூபாயும்; முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனையில் 60 கோடி ரூபாயும் திரட்டப்படும். இதற்கான பங்கு ஒன்றின் விலை 225 - 237 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. வரும் 23 முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 30ம் தேதி சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.

இண்டிகியூப் ஸ்பேசஸ் பங்கு விலை நிர்ணயம்

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட, வாடகை அலுவலக தீர்வுகளை வழங்கி வரும் இண்டிகியூப் ஸ்பேசஸ், 700 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. புதிய பங்கு விற்பனை வாயிலாக 650 கோடி ரூபாயும்; முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனையில் 50 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 225 - 237 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் 23 முதல் 25ம் தேதி வரை, குறைந்தபட்சம் 63 பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை