உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / உணவு பொருள் பாக்கெட் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து லேபிள் கட்டாயம்

உணவு பொருள் பாக்கெட் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து லேபிள் கட்டாயம்

புதுடில்லி:நுகர்வோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், உணவுப்பொருள் பாக்கெட்டின் முன்பக்கத்தில், ஊட்டச்சத்து லேபிள் இடம்பெறச் செய்யுமாறு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இது குறித்து சிவசேனா எம்.பி.,யும், பார்லி., துணை நிலை கமிட்டியின் தலைவருமான மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளதாவது:உணவு பொருள் பாக்கெட்டின் முன்பக்கத்தில், ஊட்டச்சத்து லேபிள் இடம்பெறுவதை அமல்படுத்துமாறு எப்.எஸ்.ஏ.ஏ.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்லி., துணைநிலை சட்ட குழுவின் தலைவராக, சிங்கப்பூரின் ஏ டூ டி நியூட்ரி கிரேடு அமைப்பை பரிந்துரை செய்திருந்தேன். இந்தியாவில் உடல்பருமனால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் ஆரோக்கியமான வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் வகையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தாமதமின்றி இதை அமல்படுத்த வேண்டும். ஜிலேபி, சமோசா உடல்நல கேடு குறித்து எச்சரிக்கை வாசகங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், வாழ்க்கை முறை தொடர்பான பிரச்னைகளுக்கு சமீபத்தில் சமோசா, ஜிலேபி, பக்கோடா வழிவகுக்கும் என சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இவற்றில் இடம்பெற்றுள்ள சர்க்கரை மற்றும் எண்ணெய் அளவை பள்ளிகள், அலுவலகங்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் எச்சரிக்கை வாசகத்துடன் இடம்பெற செய்ய வேண்டுமென உத்தரவிட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி