உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பயனாளர்களை சேர்க்க பேடிஎம் நிறுவனத்துக்கு அனுமதி

புதிய பயனாளர்களை சேர்க்க பேடிஎம் நிறுவனத்துக்கு அனுமதி

மும்பை:'பேடிஎம்' செயலி தன் யு.பி.ஐ., வசதியில், புதிய பயனர்களை சேர்க்க, இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகமான என்.பி.சி.ஐ., அனுமதி அளித்து உள்ளது. உ.பி., மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 'ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான பேடிஎம் செயலி, வாடிக்கையாளர்கள் தகவல் பாதுகாப்பு தொடர்பான விதிகளை சரிவர பின்பற்றாத காரணத்தால், அச்செயலியின் யு.பி.ஐ., வசதியில், புதிய பயனர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதனால், இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ., சந்தையில், 13 சதவீதமாக இருந்த பேடிஎம்மின் பங்களிப்பு 8 சதவீதமாக குறைந்தது. இந்த நேரத்தில் தங்களை வலுப்படுத்திக் கொண்ட போன்பே, கூகுள்பே ஆகிய நிறுவனங்கள், யு.பி.ஐ.,சந்தையில், 87 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருகின்றன.இந்நிலையில், கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் தரவுகளை பாதுகாப்பதுடன், யு.பி.ஐ., பரிவர்த்தனை மேற்கொள்ள பல்நோக்கு வங்கி அமைப்பை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனையுடன், பேடிஎம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக, பங்குச் சந்தையில் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்தது. இந்த அனுமதி வாயிலாக, யு.பி.ஐ., வசதி வாயிலாக பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும் பேடிஎம் நிறுவனத்துக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் பங்கு விலை நேற்று 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை