உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / முன்னெச்சரிக்கையால் சரிவு

முன்னெச்சரிக்கையால் சரிவு

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இதன் வாயிலாக, கடந்த இரண்டு நாட்களில் பதிவான நிப்டி, சென்செக்ஸ் உயர்வுக்கு தடை ஏற்பட்டது. எனினும், வார அடிப்படையில், இரண்டாவது வாரமாக சந்தை குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன • வரும் வாரத்தில் நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக வங்கி மற்றும் ஐ.டி., துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றதால், சந்தை குறியீடுகள் இறக்கத்தில் முடிந்தன• நிப்டியில், தகவல் தொழில்நுட்பம், மருந்து, வங்கி, நிதித்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள், 1 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டன. அதே நேரம், ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங் களில் 2,105 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,876 நிறுவன பங்குகள் குறைந்தும்; 122 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 4,227 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றிருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.43 சதவீதம் குறைந்து, 75.60 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து, 85.79 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை ஓ.என்.ஜி.சி.,  டாடா மோட்டார்ஸ் எஸ்.பி.ஐ.,லைப்  டைட்டன் நெஸ்லே இந்தியாஅதிக இறக்கம் கண்டவை விப்ரோ எச்.டி.எப்.சி.,பேங்க் அதானி போர்ட்ஸ் டெக் மஹிந்திரா சிப்லா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ