ரபேல் விமான பகுதி இந்தியாவில் தயாரிப்பு
புதுடில்லி:பிரான்சின் ரபேல் போர் விமானத்தின் முக்கிய உடற்பகுதியை, டாடா மற்றும் டசால்டு ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து விரைவில் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளன. இது தொடர்பான ஒப்பந்தத்தில், 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' மற்றும் 'டசால்டு ஏவியேஷன்' நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. ரபேல் போர் விமானத்தின் முக்கிய உடற்பகுதி பிரான்சுக்கு வெளியே தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்காக, ஹைதராபாதில் அதிநவீன தயாரிப்பு ஆலையை டாடா அமைக்க உள்ளது. வரும் 2027 - 28ம் நிதியாண்டு முதல் டெலிவரி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.